AI Music
தோன்றாத ஒன்றை
Thangavelac2016
10/13/2026

தோன்றாத ஒன்றை
Thangavelac2016
0:000:00
Lyrics
தோன்றாத ஒன்றை தோற்றுவிக்கும் எம்பெருமான் ஆடாத ஒன்றை ஆட்டுவிக்கும் எம்பெருமான் கூடாத ஒன்றை கூட்டுவிக்கும் எம்பெருமான் சேராத ஒன்றை சேர்த்து வைக்கும் எம்பெருமான் பாடாத ஒன்றை பாட வைக்கும் எம்பெருமான் பாரினில் பதமாய் சேர்த்தானே எம்பெருமான் ராகதமாய் சூதகமாய் வகைபாடும் பாடலெல்லாம் பேரெல்லாம் வெளியிருக்கும் தேத்தெல்லாம் கூட்டு விக்கும் ஒருக்காலும் அறியாத ஒருவித்தியை அறிவித்து தயவில் சூடாய் அறிவினில் பொருளாய் அன்பில் கலந்துருகி எங்கும் முதலாய் இருக்கும் இடமெல்லாம் ஓர் உயிர் தொடரும் தொடரும் தொடரும் என்று கூறும் உயிர் தொடர்பு அவனே எம்பெருமான் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒன்று ஏதோ ஒன்றை நினைக்கிறது. கருப்பு கருநிலை மாறாமல் கனவில் தோன்றியதெல்லாம் பிதற்றுகிறது ஏனோ எதுவோ என்று நித்தமும் அலறி அலறி பிழைக்கின்றது சத்தமும் இல்லாமல் வாழ்வியல் சருகென்று நகர்கின்றது சுற்றமும் இருந்தும் சுகம் பல நூறு கண்டும் அத்தியம் அறியாமல் ஆன்மா இதுவென்று தெரியாமல் அலைகிறது அலறுகின்றது அலறியில் பூத்த பூவாகவும் மதுவில் குடித்த மதுவில் கிடைத்த தேனாகவும் இதத்தில் பதித்த பொருள் ஆகவும் இனி ஒரு நாள் வருமோ சொந்தங்கள் கூடினும் பந்தங்கள் சேரினும் பரிசுதம் பெறுமோ அத்தியிடை சுகமும் அந்தோர்க்குக் கூடும் என்றால் அடிபட்ட பாடு எப்பாடோ கொம்பெழுத்து செயல் புரிந்து வம்பிழுத்து வந்த வகை எல்லாம் தெம்பு கொண்டு தீர்த்திடுவேனோ எம்பாவாய் எனக்களித்த தரம் இதுவென்றால் எம்பாவாய் எங்கு வந்து சேர்வேனோ தொடுவானம் ஒன்றைக் கண்டு தொலைந்திடவே போகின்றேன் வருமானம் இன்றி வான்தீகில் வரைகின்றேன் வெகுமானம் எதுவோ அன்று அறியாமல் தடுமாற்றம் புரிகின்றேன் தாருகாத்தருணமளித்த கதையைக் கேட்டு தடுமாறி தடுமாறி விழுகின்றேனே எம்பாவாய் ஓரெழுத்து ஒரு மந்திரம் உணவிதனில் கூட்டல் இல்லையே ஈரெழுத்து ஈரெழுத்து மந்திரம் எங்கு நான் சேர்ப்பேனோ மூவெழுத்து மந்திரம் கூட்டுவித்து காய்த்திடுவேனோ நான்கெழுத்து நான்கு மந்திரம் நாவிதினில் பயித்திடுமோ ஐந்தெழுத்து ஐந்து மந்திரம் அரவினில் கூடிடுமோ ஆறெடுத்து மந்திரம் ஆறுதரம் செப்பினும் அறிவினில் கூடிடுமோ ஏழெழுத்து மந்திரம் ஏகன் இருப்பினும் எனக்கு அது புரிந்திடுமோ எட்டெழுத்து மந்திரம் எட்டாத இடமோ கிட்டிடுமோ ஒன்பதெழுத்து மந்திரம் நவ எழுத்து மந்திரம் நவ ஓட்டத்தை மதிப்பிடுமோ பத்தெழுத்து மந்திரம் பரமனிடத்தில் சேர்த்திடுமோ எம்பாவாய்
Comments
Loading comments...